• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பணி ஆட்களை ஏற்றி சென்ற வேன் டயர் வெடித்து விபத்து

Byமதன்

Jan 8, 2022

தொழிற்சாலைக்கு பணி ஆட்களை ஏற்றி சென்ற வேன் விபத்துக்குள்ளானது.இந்த வேனில் பயணித்த 14 பேர் படுகாயத்துடன் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ராணிப்பேட்டையை அடுத்த ஆட்டோ நகர் பகுதியில் KMR காலணி தயாரிக்கும் தனியார் தொழிற்சாலைக்கு பணி ஆட்களை ஏற்றி சென்ற வேன் டயர் வெடித்து தடுமாறி நிலை குலைந்து எதிரே வந்த லாரி மீது மோதிய விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த 14 பேர் படு காயம். காயம் அடைந்தவர்கள் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்து ராணிப்பேட்டை காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.