• Sun. Nov 16th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கேரளாவில் கொரோனாவால் யானைகள் பாதிப்பு

Byகாயத்ரி

Jan 7, 2022

கேரள மாநிலத்தில் உள்ள வனப்பகுதிகளில் அதிக அளவில் யானைகள் உள்ளன. கடந்த 2018-ம் ஆண்டு கேரளா முழுவதும் 528 காட்டு யானைகள் இருந்தன. இந்த யானைகளை பராமரிக்க கேரள அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக காட்டு யானைகளின் மரணம் அதிக அளவில் நடந்தது. கேரளாவில் கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டபின் யானைகளின் மரணம் அதிகரித்தது. இதுதொடர்பாக கேரள வனத்துறையினர் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர்.அதன் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் கேரள மாநிலம் முழுவதும் 74 யானைகள் மரணம் அடைந்துள்ளன. கடந்த ஓராண்டில் மட்டும் 29 யானைகள் பலியாகி இருந்தன. கடந்த ஆண்டு மரணம் அடைந்த யானைகளின் ரத்தம் மற்றும் மாதிரிகளை கால்நடைதுறையினர் எடுத்து தேசிய நோயியல் ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் ஆய்வு அறிக்கை சமீபத்தில் கிடைத்துள்ளது. இதில் 15 யானைகளுக்கு கொரோனா தொற்றின் ஆரம்ப அறிகுறிகள் இருந்தது உறுதியானது. இதையடுத்து யானைகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படாமல் இருக்க வனத்துறை மற்றும் கால்நடைதுறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விலங்குகளுக்கு கொரோனா பரவுவது குறித்தும் ஆய்வு செய்து வருகிறார்கள்.