• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இந்திய எல்லையில் அத்துமீறும் சீனா..!

Byவிஷா

Jan 4, 2022

இந்திய எல்லையில் பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை அதிகரித்து வரும் சீனா, தற்போது எல்லையில் உள்ள ஏரியின் மீது பாலமும் கட்டுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த 2020ஆம் ஆண்டு இந்தியா – சீனா இடையே லடாக் பகுதி எல்லையில் கடும் மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இரு நாடுகளின் எல்லைகளுக்கு இடையே பதற்ற நிலை நீடித்து வருகிறது. இரு தரப்பும் எல்லைப் பகுதி முழுவதும் தலா 50 ஆயிரம் வீரர்களை குவித்துள்ளன.


இந்நிலையில் இந்தியாவை ஒட்டிய எல்லை பகுதியில் சாலைகள், குடியிருப்புகள், ஹெலிகாப்டர் இறங்குதளம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினருக்கான கட்டமைப்பு வசதிகளை சீனா அதிகரித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்தியாவை ஒட்டிய பாங்காங் ஏரியின் இரு கரைகளை இணைக்கும் வகையில் அதன் மீது சீனா பாலத்தை கட்டி வருவது செயற்கைக்கோள் படங்களில் தெரியவந்துள்ளது.


ஏரியின் மீது பாலம் கட்டுவது மூலம் சீனா தனது படைகளையும் ஆயுதங்களையும் போர்க்காலங்களில் வேகமாக கொண்டு செல்ல முடியும். இரு நாட்டு எல்லையில் அமைந்துள்ள பாங்காங் ஏரியில் மூன்றில் ஒரு பங்கு சீனாவின் வசமும் ஒரு பங்கு இந்தியா வசமும் உள்ளது.

மலைப்பாங்கான எல்லையில் படைகளையும் ஆயுதங்களையும் விரைந்து கொண்டு செல்லும் வசதியை இந்தியா ஏற்கனவே பெற்றுள்ள நிலையில், சீனாவிடம் அந்த வசதி இல்லாமல் இருந்தது. இதனால் 2020ஆம் ஆண்டு நடந்த மோதலின் போது சீன படைகள் பின்னடைவை சந்திக்க நேர்ந்தது. தற்போது அக்குறையை சரி செய்யும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது.