• Fri. Aug 14th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

நீலகிரி படுக இன மக்களின் கால கணக்கு…

நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் படுக இன மக்கள் தங்களது பாரம்பரியம், உடை, கலாச்சாரம் முற்றிலும் மாறுப்பட்டது. இந்த படுக இன மக்கள் தங்களது கால கணக்கை 12 வடிவங்களில் நிர்ணயித்துள்ளனர். இது குறித்து படுக சமுதாய நெலு கோலு அறக்கட்டளை வெளியிட்டுள்ளதாவது:

  1. படுகர் நாள்கணக்கில் சூரியன் உதயத்திலிருந்து மறு நாள் சூரியன் உதயம் வரை ஒரு நாள்.
  2. ஒரு வாரத்திற்கு ஏழு நாள்கள்; வாரம் திங்கட்கிழமையில் தொடங்குகிறது.
  3. ஊ ஜெந (வளர்பிறை) பதினைந்து நாள்கள்.
  4. அவ் ஜெந (தேய்பிறை) பதினைந்து நாள்கள்.
  5. படுகர் மாதம் சந்திரமானக் கணக்கை (lunar) அடிப்படையாகக் கொண்டது.
  6. படுகர் மாதம் அமாவாசைக்கு அடுத்த நாளில் பிறக்கிறது.
  7. படுகு மாதங்கள்: 1. கூடலு, 2. ஆலாநி, 3. நல்லாநி, 4. ஆநி, 5. ஆதிரெ, 6. பேராடி, 7. ஆவாநி, 8. பெரட்டாதி, 9. 0தொ0ட்0ட 0தீவிகெ, 10. கிரு 0தீவிகெ, 11. தய், 12. எம்மாட்டி.
  8. படுகர் ஆண்டு சூரியமானக் கணக்கை (solar) அடிப்படையாகக் கொண்டது.
  9. படுகர் ஆண்டும் ஓர் அமாவாசைக்கு அடுத்த நாளில் பிறக்கிறது.
  10. படுகர் காலக்கணக்கு சந்திரன் – சூரியன் (luni-solar) அடிப்படையானது.
  11. படுகர் ஆண்டு உத்திராயன தொடக்க நாளான டிசம்பர் 21 ஆம் தேதியை ஒட்டிய அமாவாசைக்கு அடுத்த நாளில் பிறக்கிறது.
  12. இரண்டு ஆண்டுகள் கழித்து வரும் மூன்றாம் ஆண்டு சரி 0பருச. அப்பொழுது ஆண்டுக் கடைசியில் வரும் ஒரு முட்டு (அமாவாசை) கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.