• Fri. Nov 14th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மகாராஷ்டிராவில் 10 அமைச்சர்கள் மற்றும் 20 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று- அஜித் பவார்

Byகாயத்ரி

Jan 1, 2022

நாட்டில் கொரோனா பாதிப்புகள் பரவலானபோது, மகாராஷ்டிராவில் அதிக எண்ணிக்கையிலானோர் பாதிக்கப்பட்டும், உயிரிழந்தும் இருந்தனர்.

இதற்கிடையே, நாடு முழுவதும் கொரோனா தொற்றுகள் குறைந்து வருகின்றன. எனினும், கொரோனா 3-வது அலை ஏற்படக்கூடிய சாத்தியம் பற்றி நிபுணர்கள் எச்சரிக்கை வெளியிட்டுள்ளனர்.இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் 10 அமைச்சர்கள் மற்றும் 20 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என துணை முதல் மந்திரி அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரித்தால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.