• Sat. Nov 28th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

இந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் எதுவும் சாதிக்கலாம்-சாந்தலிங்க மருதாசல அடிகளார் பேட்டி..,

ByKalamegam Viswanathan

Nov 28, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் விக்கிரமங்கலம் பகுதிகளில் பாலாலயம் முடிந்து இரண்டு வருடங்களுக்கு மேலாக கும்பாபிஷேகத்திற்கான பணிகள் நடைபெற்று வரும் கோவில்களில் கட்டிட பணிகளில் ஏற்படும் தாமதங்களை சரி செய்யும் பொருட்டு

கோவை பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளார்

சோழவந்தான் பொய்கை விநாயகர் கோவில் மற்றும் விக்கிரமங்கலம் மருதீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களுக்கு கட்டிட பணிகளை மேற்கொள்ளும் நடவடிக்கைக்காக வந்தார்.

இரண்டு வருடங்களுக்கு மேலாக கட்டிடப் பணிகள் நடைபெறாமல் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சோழவந்தான் பொய்கை விநாயகர் கோவிலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தற்போது கட்டிட பணிகளை மேற்கொண்டு வரும் பொறுப்பாளர்களிடம் விவரங்கள் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கோவை ஆதினம் கூறும்போது,

தற்போது மதுரை மாவட்டத்தில் பாலாலயம் நடைபெற்று கும்பாபிஷேகம் நடத்துவதற்கான கட்டடப்பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் நிதி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தடைபட்டுள்ள கட்டிடப் பணிகளை தொடர்ந்து நடத்துவதற்கான பணிகளை செய்வதற்காக விக்கிரமங்கலம் மருதீஸ்வரர் கோயில் சோழவந்தான் பொய்கை விநாயகர் ஆகிய கோவில்களில் நேரில் பார்வையிட்டு அதற்கான ஆயத்தை பணிகளை மேற்கொள்வதற்காக கோயம்புத்தூரில் இருந்து வந்ததாகவும்,

திருப்பறங்குன்றும் தமிழ் இலக்கியங்களிலே முதல் இலக்கியம் ஆன திருமுருகாற்று படையில் பேசக்கூடிய முதல் படை வீடு ஏதே ஒரு காரணத்தினால் கார்த்திகை தீபத்தன்று ஏற்றப்படவில்லை மீண்டும் திருப்பரங்குன்றம் தீபத் தூணில் நாளை தீபம் ஏற்ற வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும் நாளை தீபம் ஏற்றும் நிகழ்வை காண்பதற்கு ஆவலாக இருப்பதாகவும் கூறினார்.

தமிழகத்தில் பாலாலயம் முடிந்து கட்டடப் பணிகள் தொடங்காமல் கும்பாபிஷேகம் நடைபெறாமல் உள்ள கோவில்களில் திருப்பணிகளை உடனடியாக முடித்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனே மேற்கொள்ள வேண்டும்.

நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் எந்த ஒரு பணிகளையும் செய்து முடிக்கலாம் மற்றவர்கள் குறைவான அளவில் இருந்தாலும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் இந்துக்கள் மட்டுமே பெரும்பான்மையாக இருக்கும் சூழ்நிலையில் ஒற்றுமை இல்லாமல் இருப்பதால் தான் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படுகிறது ஒற்றுமை பலப்பட்டு நிறைய சாதிக்கலாம்.

திடீரென சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வந்ததால் நாளை திருப்பரங்குன்றம் செல்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு இருந்தாலும் அங்குள்ள சூழ்நிலைகளை பார்த்து அழைப்பிதழ் வரும் பட்சத்தில் நாளை தீபத் தூணில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு நேரில் செல்ல இருப்பதாகவும் கூறினார்.