மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 3வது வார்டு பசும்பொன் நகர் பகுதியில் குடியிருப்பவர் கண்ணாயிரம் பிள்ளை இவர் ஓய்வு பெற்ற சர்வேயர் இவரது மனைவி மகேஸ்வரி ஓய்வு பெற்ற ஆசிரியை இவரது மகன் ராம்குமார் தவெக வின் நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் இன்று மதியம் மூன்று மணி அளவில் பசும்பொன் நகரில் உள்ள இவரது வீட்டின் மாடியில் மின் கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது தினசரி மதிய வேளையில் தீப்பிடித்த வீட்டில் இவரது தந்தை படுத்து ஓய்வு எடுப்பது வழக்கம். இன்று அந்த நேரத்தில் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்ததால் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.

மதியம் மூன்று மணி அளவில் மாடியில் திடீரென தீ பிடித்து மளமளவன எரிந்த நிலையில் கீழே இருந்த கண்ணாயிரம் மேலே சென்று பார்த்த போது அவர் ஓய்வெடுக்கும் அறையில் தீ மள மள என பற்றி எரிந்துள்ளது. மேலும் அறை முழுக்க தீ பரவிய நிலையில் இவரது முகத்தில் தீ பற்றி முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக பசும்பொன் நகர் மெயின் ரோட்டில் வணிக நிறுவனம் நடத்தி வரும் தனது மகன் ராம் குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

ராம்குமார் அந்த பகுதியில் தமிழக வெற்றி கழக நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார் உடனடியாக வீட்டிற்கு வந்த ராம்குமார் வீட்டின் மாடி பகுதி தீப்பிடித்து எரிந்தது கண்டு உடனடியாக சோழவந்தான் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு வந்த சோழவந்தான் தீயணைப்பு துறையினர் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒன்றரை மணி நேரம் போராடி தீயை அணைத்ததாக கூறப்படுகிறது பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பீரோ மற்றும் அருகில் இருந்த செல்ப் அனைத்தும் எரிந்து கரும் புகையாக காணப்பட்டது. பீரோவில் 2 லட்ச ரூபாய் இருந்ததாகவும் மேலும் டிவி பிரிட்ஜ் போன்ற மின் சாதனங்களும் எரிந்து கருகி கடந்த நிலையில் அவைகளின் மதிப்பும் சுமார் ஒரு லட்சம் வரை இருக்கும் என்றும் கூறப்படுகிறது. சுமார் மூன்று லட்சம் மதிப்புள்ள பொருட்களும் மேலும் சேதமடைந்த பகுதியை சீரமைப்பதற்கு இரண்டு லட்சமும் தேவைப்படும் என்றும் அவர் வேதனையுடன் கூறினார்.
தீ விபத்து குறித்து அருகில் இருந்தவர்கள் கூறும் போது மின்வயர்கள் பழைய வயர்களாக இருப்பதால் அடிக்கடி இதுபோன்ற மின்கசிவுகள் ஆங்காங்கே ஏற்படுவதாகவும் சோழவந்தான் பகுதியில் ஏற்கனவே பழைய மின் வயிர்கள் காரணமாக டிரான்ஸ்பார்மர் களில் தீப்பிடித்து அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகவும் இன்று காலையில் கூட பேட்டை பகுதியில் மின்வயர் அருந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக பள்ளி குழந்தைகள் உயிர் பிழைத்த சம்பவம் நடந்துள்ளதாகவும் கூறும் பொதுமக்கள் மின்சாரத் துறையினர் போர்க்கால அடிப்படையில் பழுதடைந்த மின் வயர்களை மாற்ற வேண்டும்.

மேலும் கூடுதல் பணியாளர்கள் கொண்டு மின்தடையை ஏற்படாதவாறு சரி செய்ய வேண்டும் இது போன்ற மின்விபத்துகள் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.