கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில், சட்டமன்ற உறுப்பினர் திருமதி R.D. கனிமொழி சந்தோஷ் அவர்களின் முன்னிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் மற்றும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் வழங்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கவுண்டம்பாளையம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் அவர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வரும் மக்கள் நலப்பணிகள், களப்பணிகள் மற்றும் பொதுமக்களுக்கான சேவைகளால் ஈர்க்கப்பட்டு, துபாய் TVK EVENTS சார்பில் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் முதல்முறையாக துபாய் TVK EVENTS சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டிற்காக சக்கர நாற்காலிகளும், பொதுமக்களின் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அத்தியாவசிய மளிகைப் பொருட்களும் வழங்கப்பட்டன.
துபாய் TVK EVENTS பிரதிநிதி திரு.அனிருத் தெரிவிக்கையில்:
“கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் அவர்களின் மக்கள் நலச் செயல்பாடுகள் மற்றும் தொகுதி மக்களுக்காக அவர் தொடர்ந்து மேற்கொண்டு வரும் பணிகளால் நாங்கள் மிகவும் ஈர்க்கப்பட்டோம். அதன் காரணமாகவே கவுண்டம்பாளையம் தொகுதிக்கு நேரடியாக வந்து நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளோம்.
வரும் காலங்களிலும் எங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் அவர்களுடன் இணைந்து தொகுதி மக்களுக்கு வழங்கி, மக்கள் நலப்பணிகளில் தொடர்ந்து பணியாற்றத் தயாராக உள்ளோம்.
மேலும், துபாய் வாழ் தமிழக வெற்றிக் கழகத்தினர் என்ற அமைப்பின் மூலம் வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காகவும் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பெரியநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றியச் செயலாளர் சுரேஷ், 35-வது வார்டு பகுதி செயலாளர் முத்துவேல் ராஜா, துடியலூர் 1,2, மற்றும் 14-வது வார்டு பகுதி செயலாளர் சபரி மனோ, எஸ்.எஸ்.குளம் ஒன்றியச் செயலாளர் கணேசமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர் .

மேற்படி குறிப்பிட்ட வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பயனாளிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் அவர்கள் நேரில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளையும், குடும்பங்களுக்குத் தேவையான அத்தியாவசிய மளிகைப் பொருட்களையும் வழங்கி பயனாளிகளுடன் கலந்துரையாடினார்.