• Mon. Nov 16th, 2026

நகை கடை கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளி கைது..,

ByKalamegam Viswanathan

Nov 16, 2026

மதுரை தனிஷ்க் ஜுவல்லரி நகைக்கடையில் பல கோடி மதிப்பிலான நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் நிஷாந்தின் தோழி மீனாட்சி மற்றும் நிஷாந்தின் தந்தை சுரேஷ் ஆகிய இருவரும் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கின் முக்கிய நபரான நிஷாந்த் பைக் வாடகை கார் பேருந்து என மாறி மாறி தப்பித்துவந்த நிலையில் 5 நாட்களாக காவல்துறையினர் தேடிவந்தனர். சேலம் , தர்மபுரி ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளிலும் தேடி வந்தனர்

இந்த நிலையில் பெங்களூரிலிருந்து சேலம் நோக்கி வந்த ஆம்னி பேருந்தில் நிஷாந்த் பயணித்தபோது நிஷாந்தின் நடமாட்டம் குறித்து சந்தேகமடைந்த ஓட்டுனர் அதியமான் கோட்டை காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்

இதனையடுத்து தர்மபுரி மாவட்டம் சேசம்பட்டி பைபாஸ் பகுதியில் ஆம்னி பேருந்தில் நிஷாந்த் வந்து கொண்டிருந்தபோது அதியமான் கோட்டை காவல்துறையினர் பேருந்தை நிறுத்தி நிஷாந்தை கைது செய்தனர்

அப்போது நிஷாந்த் ஜன்னல் வழியாக தப்பியோட முயன்ற போதும் காவல்துறையினர் வளைத்து நிஷாந்தை கைது செய்துள்ளனர் இதனையடுத்தாக தனிப்படை காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு தனிப்படை காவல்துறையினர் மதுரையிலிருந்து தர்மபுரிக்கு விரைந்துள்ளனர்.

நிஷாந்த் கைது செய்யப்பட்ட நிலையில் அவனிடம் நடத்தக்கூடிய விசாரணையில் தான் தங்க நகைகளை எங்கு பதுக்கி வைத்துள்ளான் எப்படி கொள்ளை அடித்துள்ளான் என்பது குறித்தான முழு விவரங்கள் தெரியவரும்