• Fri. Nov 13th, 2026

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்கும் திட்டம்..,

ByAjmalkhan saleemraja

Nov 13, 2026

தொடர்ந்து அங்கன்வாடி மையக் குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்தினார்.

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார்.

இதன் ஒரு பகுதியாக, தேனி அல்லிநகரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேனி மாவட்ட ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு முதலமைச்சர் விஜயின் வாழ்த்து அட்டையுடன் கேக் வழங்கப்பட்டது. தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்திற்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி, அங்கிருந்த குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து காலை உணவை உட்கொண்டார்.

குழந்தைகளுடன் இணைந்து உணவருந்திய மாவட்ட ஆட்சியரின் செயல் அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.