விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம் பண்ணையில் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் நடைபெற்று வந்தன. திருப்பணி வேலைகள் முடிந்த நிலையில் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது.

கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜைகள், தீபரதனை, உள்ளிட்ட சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தொடர்ந்து விமான கலசத்திற்கும் பொன் கருப்பசாமி, மாரி அய்யனார், விநாயகர், பாலமுருகன், பாலம்மாள், பால நாகன், மற்றும் மூலவர் சப்த கன்னிகளாக அருள்பாலிக்கும் காமாட்சி அம்மனுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு 16 வகையான அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் நடைபெற்றது.
சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் திருப்பணி குழு கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

திருக்கோவில் அறக்கட்டளை நிர்வாக கமிட்டி தலைவர் சுரேஷ்குமார், செயலாளர் தினேஷ் குமார், பொருளாளர் வேலுச்சாமி, உள்ளிட்ட நிர்வாகிகள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.