விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கலெக்டர் ஷரண்யா அறி நேரில் ஆய்வு செய்தார். மருத்துவமனை செயல்படும் பகுதிகளை பார்வையிட்டார்.

தொடர்ந்து மருத்துவ அலுவலர் செந்தட்டி காளையிடம் மருத்துவமனையில் போதிய மருந்துகள் இருப்புகள் உள்ளதா புற நோயாளிகள் முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா டெங்கு ,மலேரியா, காய்ச்சல் அறிகுறி ஏதும் தெரிகிறதா என கேட்டார். தொடர்ந்து கர்ப்பிணி தாய்மார்கள் எண்ணிக்கை குறித்தும் அவர்கள் முறையாக வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள் எனவும் கேட்டறிந்தார்.
போதுமான மருத்துவ உபகரணங்கள் சரியாக செயல்படுகிறதா எனவும் மருத்துவமனையில் காலி பணியிடங்கள் ஏதும் உள்ளதா எனவும் விசாரித்தார்..

ஆய்வு நிகழ்ச்சியில் தாசில்தார்கள் சிவகாசி ஜெய பாண்டி, வெம்பக்கோட்டை ஆனந்தராஜ், யூனியன் ஆணையாளர் மகேஸ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சிகள் சம்பத் சீனிவாசன் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.