தமிழகத்தில் பதிவுத் துறையில் புதிதாகக் கொண்டு வரப்பட்டுள்ள ஸ்டார் 3.0 எனும் இணைய வழித் திட்டத்தை கைவிடக்கோரி, மதுரை நாகமலை புதுக்கோட்டை பத்திரப்பதிவு அலுவலக வாயிலில் வாசலில் 50-க்கும் மேற்பட்ட பத்திர எழுத்தர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் கண்களைக் கருப்புத் துணியால் மூடி அரசுக்கு எதிராக பல்வேறு கண்டன முழக்கங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

பதிவுத் துறையில் ஸ்டார் 3.0 எனும் இணையவழித் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது இந்தப் புதிய திட்டம் நடை முறைக்கு வந்தால், பாரம்பரியமாக ஆவணங்கள் எழுதும் தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான பத்திர நகல் எழுத்தர்கள், ஆவண எழுத்தர்களின் மற்றும் வழக்கறிஞர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

எனவே, இந்தத் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு பத்திரம் நகல் எழுதுவோர் சங்கம் மற்றும் வழக்கறிஞர்கள் சார்பில் இன்று பணிகளைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்
மதுரை நாகமலைப் புதுக்கோட்டை, வாடிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சார்பதிவாளர் அலுவலகம் முன் பத்திர நகல் எழுத்தர்கள் பணிகளைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இந்தப் போராட்டத்தால் அலுவலகத்தில் பத்திரப் பதிவுப் பணிகள் முற்றிலும் முடங்கின. இதனால்,பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..