• Wed. Nov 11th, 2026

வாடிப்பட்டியில் சேரும் சகதியுமாக காணப்படும் வார சந்தை..,

ByKalamegam Viswanathan

Nov 11, 2026

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேருந்து நிலையம் அருகில் உள்ள வாரச்சந்தை மிகவும் பிரபலமானதாகும் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் இந்த வார சந்தையில் அதிகாலை 4 மணி முதல் ஆடு மாடுகளுக்கான சந்தையாகவும் மதியம் 3 மணிக்கு மேல் பொதுமக்களுக்கான காய்கறி சந்தையாகவும் செயல்பட்டு வருகிறது.

வாடிப்பட்டி சுற்றியுள்ள 30 க்கு மேற்பட்ட கிராம பொதுமக்கள் இந்த சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி சென்று வருகின்றனர். இந்த நிலையில் சந்தையில் பல்வேறு இடங்களில் மின்சார வசதி இல்லாத நிலையும் பல இடங்களில் சிறிய மழை பெய்தாலே சேரும் சகதியுமாக மாறிவிடுவதால் பொதுமக்கள் வணிகர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். வியாபாரிகள் கடைகள் வைக்கும் இடங்களில் சேரும் சகதியுமாக காணப்படுவதால் கடும் சிரமங்களுக்கு மத்தியில் வியாபாரம் செய்கின்றனர். பொதுமக்களும் சேரும் சகதியமாக காணப்படும் இடத்தில் நடந்து சென்று காய்கறிகளை வாங்கி செல்வதால் காய்கறிகள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும் பொதுமக்கள் மத்தியில் புகார் தெரிவிக்கப்படுகிறது.

பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திற்கு இதுகுறித்து புகார் அளித்தும் பேரூராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் நகரின் மையப் பகுதியில் உள்ள இந்த வார சந்தையால் செவ்வாய்க்கிழமை தோறும் வாடிப்பட்டி நகருக்குள் கடும் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுகிறது. இதன் காரணமாக அடிக்கடி விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர் வாரச்சந்தை அருகிலேயே வாடிப்பட்டி அரசு மருத்துவமனை உள்ளதால் சந்தையால் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கும் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக கூறுகின்றனர். பொதுமக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமாக உள்ள இந்த வார சந்தையை வாடிப்பட்டியின் புறநகர் பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் மற்றும் வாரச்சந்தைக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் மற்றும் ஃபேவர் பிளாக் போன்ற வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் வாடிப்பட்டி வார சந்தையில் பேரூராட்சி அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் அடிப்படை வசதிகள் உள்ளனவா என ஆய்வு செய்து வாரச்சந்தை நடத்துபவர்களிடம் உரிய அடிப்படை வசதிகளை செய்யவும் மின்சார வசதி ஏற்படுத்தவும் போக்குவரத்து நெருக்கடி இல்லாமல் வார சந்தை நடத்துவதற்கும் உரிய அறிவுறுத்தலை வழங்க வேண்டும் என பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.