• Tue. Nov 10th, 2026

திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்..,

ByKalamegam Viswanathan

Nov 10, 2026

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இன்று 10-ந் தேதி காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி திருவிழா தொடங்குகிறது.

கந்த சஷ்டி திருவிழா தமிழ் கடவுள் முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதற் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கொண்டாடப்படும் முக்கியமான விழாக்களுல் கந்தசஷ்டி திருவிழா முக்கிய விழாவாகும்.

இந்த திருவிழா ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் வளர்பிறை திரிதியை நட்சத்திரத்தில் துவங்கி 7 நாட்கள் வெகு விமர்ச்சியாக கொண்டாடுப்படுவது வழக்கம் .

ஆகவே இந்த ஆண்டிற்கான கந்த சஷ்டி திருவிழா இன்று செவ்வாய் கிழமை 10-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி வருகின்ற 16- ந் தேதி வரை நடைபெறுகிறது

10 ந் தேதிகாப்பு கட்டுதல்
திருவிழாவின் முதல் நாளான 10-ந் தேதி (செவ்வாய்கிழமை) காலை 7 மணியளவில்உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமிக்கும், பிறகு சண்முகர்சன்னதியில் வள்ளி மற்றும் தெய்வானையுடன் சண்முகருக்குமாக காப்பு கட்டுதலும் நடைபெறும் .

இதனையடுத்து 9. மணியளவில் முருகப்பெருமானின் பிரதிநிதியாக சூரம் சம்ஹார விழாவில் பங்கேற்கும் கோவில் சிவாச்சிரியருக்கு காப்பு கட்டப்படுகிறது.

பின்னர் கோவில் கம்பத்தடி மண்டபத்தில் பக்தர்களுக்கு கைகளில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும் .

இதனை தொடர்ந்து காப்பு கட்டிய பக்தர்கள் ஒவ்வொருவரும் தங்களது வேண்டுதலின் படி ஒரு வேளை மட்டும் பால், மிளகு, துளசி ஆகியவற்றை சாப்பிட்டு கோவிலிலே 6 நாட்கள் தங்கி கடும் விரதம் இருக்கிறார்கள்.

மேலும் அவர்கள் தினமும் காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளையிலுமாக கோவிலுக்கு கிழக்கு பகுதியில் உள்ள சரவண பொய்கையில் நீராடி கிரிவலம் வந்து தரிசனம் செய்வார்கள்.

14ம் தேதி கோவர்த்தன அம்பிகையிடம் சக்திவேல் வாங்கும் விழா
15-ந தேதி சூரசம்ஹாரம்

கந்த சஷ்டி விழாவினையொட்டி 6 நாளும் விசாக கொறாடு மண்டபத்தில் ஒரு வேளை யாகசாலை பூஜையும், சண்முகர் மண்டபத்தில் காலை 11 மணியளவிலும், மாலை 5 மணியளவிலுமாக 2 வேளையில் வள்ளி தெய்வானை சமேத சண்முகப்பெருமானுக்கு சண்முகார்ச்சனையும் நடைபெறுகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக வருகின்ற 14-ந் தேதி வேல் வாங்குதலும், 15-ந் தேதி சூரசம்ஹாரமும், 16-ந்தேதி காலை கிரிவல பாதையில் சட்டத் தேர் வலம் வருதல் – பாவாடை தரிசனம் ஆகியவை நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.