• Tue. Nov 10th, 2026

தேனியில் சிறப்பு சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் கொலை வழக்கில் 6 பேர் கைது..,

ByAjmalkhan saleemraja

Nov 10, 2026

தேனி சமத்துவபுரம் பகுதியில் சாலையை மறித்து பட்டாசு வெடித்து ரீல்ஸ் எடுத்த இளைஞர்களைத் தட்டிக்கேட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம், சமத்துவபுரம் பகுதியில் பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக இளைஞர்கள் சிலர் சாலையில் பட்டாசு வெடித்து ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்தனர்.

இதனைத் தட்டிக்கேட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் செந்தில்குமாரை இளைஞர்கள் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தேனி மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்தக் கொலை வழக்கு தொடர்பாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கௌதம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய கௌதம், மகேஸ்வரன், சூரியமூர்த்தி, தீபன் ராஜ், ஆகாஷ் மற்றும் பரத் பிரனேஷ் உள்ளிட்ட 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கௌதம் தெரிவித்தார்.