திருவூர் சூப்பர் கிங்ஸ் சிலம்பம் பயிற்சி மையம் சார்பில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு தற்காப்பு விழிப்புணர்வு சிலம்பம் போட்டி திருவூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காய் கனி வார சந்தை வளாகத்தில் நடைபெற்றது ,

பாதுகாப்போடு பாட்டாசு எவ்வாறு வெடிப்பது , விபத்து ஏற்படாமல் வெடிப்பது ,அரசு நிர்ணயம் செய்யும் நேரங்களில் வெடிப்பது, விபத்து ஏற்ப்பட்டால் தன்னையும் மற்றவர்களையும் காப்பது என பலவேறு போட்டிகள் நடைப்பெற்றது. 100 கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் போட்டியில் கலந்துக் கொண்டவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா.அருணன் சான்றிதழ் மற்றும் வெற்றி கேடயம் வழங்கினார். , முன்னதாக அனைவரையும் திருவூர் சூப்பர் சிங்ஸ் நிறுவனர் சுந்தர் ( எ) துரைராஜ் வரவேற்றார் ,

பயிற்சியாளர்கள் ஜெயா, ரோஹித் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாணவ மாணவிகளுக்கு பதக்கங்களை, த.வெ.க ஒன்றிய செயலாளர் விஜயகுமார், முன்னாள் வார்டு உறுப்பினர் சுபாஷ் , சமூசேவகர்கள் பால்ராஜ், தாமோதிரன், உதயகுமார் வழக்கறிஞர்கள் எட்வின் , அன்பு , முறுசாமி ஆகியோர் அணிவித்தனர். நிகழ்வில் பெற்றோர்கள் பொது மக்கள் என ஏராளமானோர் கலந்துக் கொண்டனர் முடிவில் லோகரட்சகி நன்றி கூறினார்.
