• Sat. Nov 7th, 2026

வெங்கிட்டாபுரம் பகுதி திமுக சார்பில் 1,000-க்கும் மேற்பட்டோருக்குப் புத்தாடைகள், இனிப்புகள்..,

BySeenu

Nov 7, 2026

வெங்கிட்டாபுரம் பகுதி திமுக சார்பில் நடைபெற்ற தீபாவளிக் கொண்டாட்டத்தில், தூய்மைப் பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் என 1,000-க்கும் மேற்பட்டோருக்குப் புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் பட்டாசுகள் வழங்கப்பட்டன.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

குடும்பத்தினருடன் பண்டிகையைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்ளவும் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், கோவை மாநகர் மாவட்ட திமுகவின் வெங்கிட்டாபுரம் பகுதிக் கழகம் சார்பில் 18வது ஆண்டாக தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

பகுதி பொறுப்பாளர் சிவராமன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தூய்மைப் பணியாளர்கள், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

சிறப்பு விருந்தினர்களாக கோவை மாவட்ட திமுக பொருளாளர் எஸ்.எம்.முருகன், மாநகர் மாவட்டத் துணைச் செயலாளர் கல்பனா செந்தில் ஆகியோர் கலந்துகொண்டனர். அவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்குப் புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் பட்டாசுகளை இலவசமாக வழங்கி, தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

பண்டிகை மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தூய்மைப் பணியாளர்களும் பொதுமக்களும் தங்களுக்கான பொருட்களைப் பெற்றுக்கொண்டனர். கட்சி நிர்வாகிகள் பங்கேற்று பொருட்கள் வழங்கும் பணிகளை ஒருங்கிணைத்தனர்.

நிகழ்ச்சியில் வட்டக்கழகப் பொறுப்பாளர்கள் சிவபாலன், ஷாம் ஜெயபால், பொன்ராஜ் நடராஜன், சம்பத் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.