• Sat. Nov 7th, 2026

மதுரையில் தீபாவளிச் சிறப்பு நலத்திட்ட விழா..,

ByKalamegam Viswanathan

Nov 7, 2026

மதுரை காந்தி மியூசியத்தில் தீபாவளிப் பெருநாளை முன்னிட்டு பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நலத்திட்ட விழா இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு காந்தி மியூசியத்தின் செயலாளர் திருமிகு. K.R. நந்தாராவ் அவர்கள் தலைமை தாங்கினார். மதுரை அரசு வழக்கறிஞர் திருமிகு. M. சொக்கலிங்கம் மற்றும் துளிர் அகாடமி மதுரையின் கல்வியாளர் திரு. R.முத்துத்துமார் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.

விழாவில், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் முன்னாள் அறங்காவலர் திருமிகு. வ. சண்முகசுந்தரம் அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான நலத்திட்ட உதவிகளையும், வேஷ்டி, சட்டை, சேலை மற்றும் இனிப்புகளையும் வழங்கி தீபாவளி வாழ்த்துகளைப் பரிமாறினார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை மதுரையின் அட்சயா பாத்திரம் ட்ரஸ்ட் சேர்மன் நெல்லை பாலு அவர்கள் மிகச் சிறப்பாகச் செய்திருந்தார். இந்த விழாவில் திரளான பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு தங்களது தீபாவளி மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.