மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் மதுரை ஆட்சியர் அலுவலக தீயணைப்பு துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

தீபாவளியை விபத்தின்றியும், மாசில்லாத வகையிலும் மாணவர்கள் எவ்வாறு பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என்பது தொடர்பாக பயிற்சி ஒத்திகை நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் ஷேக்நபி தலைமை வகித்தார். தல்லாகுலம் தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன், சிறப்பு நிலைய அலுவலர் முகமது சலீம் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் மார்த்தாண்டன், ராஜபூபதி, முருகானந்தன், நிஷாந்தன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பாதுகாப்பாக பட்டாசுகளை எவ்வாறு வெடிப்பது என்று செய்முறை விளக்கத்தோடு பயிற்சி அளித்தனர்.

ஒத்திகையின்போது, பிடித்து பற்ற கையில் வெடிகளை வைக்கக்கூடாது. ராக்கெட் போன்ற வெடிகளை எப்படி பாதுகாப்பாக கையாளுவது என்றும் பட்டாசு வெடித்து முடித்த பிறகு தண்ணீர் ஊற்றி அணைக்க வேண்டும் என்பதையும் விளக்கிக் காட்டினர்.
உதவி தலைமை ஆசிரியர்கள் முகமது ரபி, அல்ஹாஜ் முகமது மற்றும் ஆசிரியர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
