• Wed. Nov 4th, 2026

வாய்க்கொழுப்பு அமைச்சருக்கு முன்னாள் அமைச்சர் ஆர்பி_உதயகுமார் எச்சரிக்கை..,

ByKalamegam Viswanathan

Nov 4, 2026

மதுரை மத்திய தொகுதி தவெக எம்.எல்.ஏ முஸ்தபா இன்று செய்தியாளர்களிடம், ‘’தவெக அரசுக்கு எதிரான நம்பிக்கையின்மை தீர்மானத்தில், எதிர்த்து வாக்களிக்கும்படி என்னிடம் பேரம் பேசினார்கள். 30 கோடி ரூபாய் வரை தருவதாக அதிமுக பிரமுகர் ஒருவர் என்னிடம் பேசினார்’’ என்று ஒரு கதை விட்டிருக்கிறார்.

அதேபோல் அமைச்சர் நிர்மல்குமார், ‘’தமிழக வெற்றிக் கழக ஆட்சியைக் கவிழ்க்க திமுகவும் அதிமுகவும் கூட்டுச் சதி செய்கிறது’’ என்று முற்றிலும் ஆதாரமற்ற, அரசியல் உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்.

இந்த அரசியல் யோக்கியர்தான், ‘இயல் இசை நாடக மன்றத் தலைவர் நியமனத்திற்காக 5 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டது’ என்று கூறியவர்.
இந்த கோமாளி அமைச்சர்தான் மின்சாரத்தை ஒரு யூனிட் மின்சாரத்தை 37 ரூபாய்க்கும் 41.50 ரூபாய்க்கும் வாங்குவதற்கு ஒப்பந்தம் போட்டவர். இதேநேரத்தில் கேரள அரசு ஒரு யூனிட் மின்சாரத்தை 12.50க்கு வாங்கியிருக்கிறது.

இந்த கோல்மால், ஊழல்களை திசை திருப்புவதற்காக அதிமுகவின் பெயரைத் தேவையின்றி இழுத்துப் பேசுவதை அமைச்சர் நிர்மல் குமாரும் தவெக சட்டமன்ற உறுப்பினர்களும் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.

ஊழலுக்கு எதிராக தொடங்கப்பட்ட அதிமுகவுக்கு ஜனநாயக ரீதியில் மக்களை சந்தித்து ஆட்சிக்கு வரத் தெரியும். குறுக்குவழியில் ஆதாயம் தேடவேண்டிய அவசியம் அதிமுகவுகு இல்லை. மக்களின் ஆதரவோடும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் வழியிலும் செயல்படும் மக்கள் இயக்கம் அதிமுக. எனவே, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் அரசியல் நாடகம் நடத்துவதை விட்டுவிட்டு, மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் கவனம் செலுத்த வேண்டும். அதிகப்பிரசங்கித்தனமாகப் பேசினால் சட்டநடவடிக்கையை எதிர்கொள்ள் வேண்டியிருக்கும்.