• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் செல்ல பொது மக்களுக்கு தடை

Byகாயத்ரி

Dec 31, 2021

கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் செல்ல பொதுமக்களுக்கு 3 நாட்கள் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் ஒமைக்ரான் வகை உருமாறிய கொரோனா பரவலை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை, நீர்வீழ்ச்சி பூங்காக்கள் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் செல்ல பொதுமக்களுக்கு 3 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று (31-ம் தேதி) முதல் ஜனவரி 2-ம் தேதி வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை, நீர்வீழ்ச்சி பூங்காக்கள் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் செல்ல பொதுமக்களுக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.