தீபாவளியை முன்னிட்டு தனிஷ்க் ஜுவெல்லரி நிறுவனம் சிறப்புத் தங்கப் பரிமாற்றச் சலுகையை அறிவித்துள்ளது. இதன்படி, பழைய தங்க நகைகளைப் பரிமாற்றம் செய்யும்போது கூடுதலாக ஒரு காரட் மதிப்பு வழங்கப்படுவதுடன், 20 சதவீதம் வரை செய்கூலி தள்ளுபடி மற்றும் கிராமுக்கு ரூ.301 தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சலுகை நவம்பர் 8-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.

தனிஷ்க் மற்றும் பிற நகைக்கடைகளில் வாங்கிய பழைய, உடைந்த தங்க நகைகளையும் ரசீது இல்லாமல் பரிமாற்றம் செய்யலாம். 9 காரட் முதல் பல்வேறு தூய்மை நிலைகளைக் கொண்ட தங்க நகைகளையும் இத்திட்டத்தின் கீழ் மாற்றிக்கொள்ளலாம். பழைய தங்கத்தின் எடை மற்றும் தூய்மை வாடிக்கையாளர்கள் முன்னிலையிலேயே நவீன கருவிகள் மூலம் பரிசோதிக்கப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தச் சலுகை மூலம் பழைய நகைகளைப் புதிய வடிவமைப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளாக மாற்றிக்கொள்ளலாம். தனிஷ்க் நிறுவனத்தின் அனைத்து விற்பனையகங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தனிஷ்க் நிறுவனத்தின் தமிழ்நாடு வட்டார வணிக மேலாளர் சந்திரசேகர், கோவைப் பகுதி வணிக மேலாளர்கள் நவீன், சிவரஞ்சனி மற்றும் பிரான்சைசி பார்ட்னர் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சலுகைகள் குறித்து விளக்கினர்.