• Tue. Nov 3rd, 2026

எந்த காலத்தில் அதிமுக திமுக ஒன்று சேராது -முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி..,

ByS. SRIDHAR

Nov 2, 2026

புதுக்கோட்டையில் 23.5 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது முதல்வர் விஜய் இன்று பேருந்து நிலையத்தை திறந்து வைத்து பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் நிதி ஒதுக்கியது திமுக அரசு தான் என்றும் தமிழக வெற்றிக்கழக அரசு எதுவும் செய்யவில்லை நாங்கள் தீட்டிய திட்டத்திற்கு இந்த அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது என்று கூறி நேற்று முன்தினம் திமுக சார்பில் இனிப்புகள் வழங்கி பட்டாசுகள் வைத்து கொண்டாடப்பட்ட நிகழ்வில் காவல்துறைக்கும் திமுகவிற்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது இந்த நிலையில் இன்று திறப்பு விழா முடிந்த பிறகு மாலை முன்னாள் அமைச்சர் ரகுபதி தலைமையில் திமுகவினர் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து பட்டாசுகள் விடுத்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர் மேலும் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை ரகுபதி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பார்வையிட்டனர்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரகுபதி
இந்த அரசியல் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை நாங்கள் கொண்டு வந்த திட்டத்தை தான் முடித்த பணிகளை இவர்கள் என்று திறப்பு விழா காண்கிறார்கள் மேலும் இந்த ஆட்சியில் ஏமாற்றம்தான் மிதியுள்ளது இன்று புதிய பேருந்து நிலையத்தில் திறந்த பிறகு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆயுத பூஜை மைதானத்தில் நடப்பதாக இருந்தது ஆனால் திடீரென்று அது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டது பல கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட அஞ்சல் அமைக்கும் பணியும் மேடையை அமைக்க பணியும் நடைபெற்ற நிலையில் திடீரென்று இந்த இடம் ரத்து செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டதால் பல கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது இதேபோன்று முதல்வர் காணொளி காட்சி மூலமாக இதை தெரிந்து இருக்கலாம் அவ்வாறு திறந்து இருந்தால் 10 கோடி ரூபாய் அளவில் அரசிற்கு மிச்சமாயிருக்கும் இந்த நிதியை பயன்படுத்தி பள்ளிகளின் வளர்ச்சி நிதிக்காக பயன்படுத்தியிருக்கலாம்

சிறைத்துறை சார்பில் நடத்தப்பட்ட பெட்ரோல் பங்குகள் மூடும் நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.

சட்டத்துறை அமைச்சரை தனியார் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சந்தித்து சிறைத்துறை பெட்ரோல் பங்குகளால் தங்களுக்கு நட்டம் ஏற்படுகிறது என்று தெரிவித்ததை தொடர்ந்து தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தற்போது லேசாக தகவல் கசிந்துள்ளது.

பிரிசன் பஜாரையும் மூடியுள்ளனர்.

சிறையில் இருந்து தப்பித்தவர்களுக்கும் சிறைத்துறை பெட்ரோல் வங்கியில் பணிபுரியும் ஆயுள் தண்டனை கைதிகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது இவர்கள் தப்பித்தல் எல்லாம் சொல்ல மாட்டார்கள் இது போன்ற பொய்யான வதந்தியை கிளப்பி விட்டு அதன் மூலமாக சிறைத்துறை பெட்ரோல் பங்கை மூட நடவடிக்கை மேற்கொண்ட வருகின்றனர்….

திமுக ஆட்சிக்காலத்தில் நிதி ஒதுக்கப்பட்டு கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் என்று கூறியதற்கு அமைச்சர் முகமது பர்வேஸ் அவர்கள் பணத்தில் செய்தார்கள் மக்கள் பணத்தில் தான் செய்தார்கள் என்று விமர்சனம் செய்துள்ளார். அவர் சிறிய பையன் அரசியல் தெரியாது அதனால் அவருக்கு அரசியல் தெரியவில்லை அரசியலை தெரிந்து கொண்டு அவர் பேச வேண்டும்.

காலையில் தான் கொடுத்த அறிக்கையை படித்து விட்டு தான் தமிழ்நாடு சிறைத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது அது நான் கொடுத்த அறிக்கைக்கு கிடைத்துள்ள வெற்றி.

எங்கள் ஆட்சியில் சிறை துறை பாதுகாப்பாக இருந்தது அங்கு வழங்கும் சாப்பாடு தரமாக இருந்தது. சாப்பாடை கூட முறையாக கொடுக்கவில்லை என்று தற்போது தேனி சிறையில் இருந்து தப்பிய கைதிகள் தெரிவித்துள்ளனர். சிறையில் உள்ள கைதிகள் மீதும் அக்கறை கொண்டு இருந்த அரசு தான் திராவிட மடல் அரசு.

அதிமுக திமுக சேர்ந்தது என்று சொல்லி தவெக கிளப்பும் பொய்யான வதந்தி. குட்டையை குழப்பி மீன் பிடிக்க பார்க்கின்றனர்.

அதிமுக திமுக எக்காலத்திலும் ஒன்று சேராது. இது வதந்தி. தவெக பரப்பிய மிகப்பெரிய வதந்தி இது

60லிருந்து 70 பேர் சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக கட்சியில் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்று தகவல் வருகிறது அவர்கள் வேண்டுமென்றால் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் வரும்…..