• Sun. Nov 1st, 2026

துபாயில் சர்வதேச கராத்தே, சிலம்பப் போட்டி ..,

BySeenu

Nov 1, 2026

துபாயில் நடைபெற்ற இந்தோ – துபாய் சர்வதேச கராத்தே மற்றும் சிலம்பப் போட்டியில், கோவை கார்மல் கார்டன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

கடந்த அக்டோபர் 25-ம் தேதி துபாயில் நடைபெற்ற இப்போட்டியில், கோவை கார்மல் கார்டன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 3-ம் வகுப்பு மாணவர் ராம் ஈஸ்வர், 7-ம் வகுப்பு மாணவி ஜெஸ்லி ஆகியோர் பங்கேற்றனர்.

இதில், ராம் ஈஸ்வர் கட்டா பிரிவில் வெள்ளிப் பதக்கமும், சண்டைப் பிரிவில் தங்கப் பதக்கமும் வென்றார்.

ஜெஸ்லி கட்டா பிரிவில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். இதன் மூலம் மாணவர்கள் மொத்தம் 2 தங்கம், ஒரு வெள்ளி என 3 பதக்கங்களைக் கைப்பற்றி பள்ளிக்கும் கோவை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

சர்வதேச அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களைப் பள்ளியின் தாளாளரும் முதல்வருமான அருட்தந்தை ஆரோக்கிய ததேயூஸ் பாராட்டி வாழ்த்தினார்.

மேலும், கராத்தே பயிற்சியாளர்கள் சிரில் வினோத், கோகுலகிருஷ்ணன், ஆனந்த், சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வெற்றி பெற்றவர்களைப் பாராட்டினர்.