• Sat. Oct 31st, 2026

போடிநாயக்கன்பட்டியில் தேவர் ஜெயந்தி விழா குருபூஜை..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டி பிரமலைக் கள்ளர் நல சங்கம் மற்றும்தேவர் இளைஞர் பேரவை சார்பாக 119 வது தேவர் ஜெயந்தி விழா, 64வது குருபூஜை நடந்தது.இந்த விழாவை முன்னிட்டு பசும்பொன் முத்துராம லிங்க தேவர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து சிறப்பு பூஜை செய்துஅன்ன தானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச் சிக்கு சங்கத் தலைவர் தங்கமலை சாமி தலைமை தாங்கினார்.ஓய்வு பெற்ற உதவி கோட்ட செயற் பொறி யாளர் துரை முன்னிலை வகித் தார்.சங்க பொருளாளர் டாக்டர் செவ்வேல் செல்வபாண்டியன் வரவேற்றார். சங்கத் துணைத் தலைவர் சந்திர மோகன் தேவர் திருவுருவப்படத்தை திறந்து வைத்தார். ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜெயராஜ் அன்னதானம் வழங்கினார்.

இதன் ஏற்பாடுகளை சங்க செயலாளர் பாஸ்கரன் மற்றும் இளைஞர் பேரவை உறுப்பினர்கள் பால்பாண்டி, சதீஷ் ராஜ்குமார் , விஜி ,கவாஸ்கர் ,போஸ் ,செல்வம், விக்கி ஞானசேகர், மகேந்திர பூபதி,காடுபட்டி முருகன் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் ரூபன் நீலகண்டன் நன்றி கூறினார்.