• Fri. Oct 30th, 2026

தேவர் திருமகனாரின் 119 -வது ஜெயந்தி விழா..,

ByP.Thangapandi

Oct 30, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தேவர் திருமகனாரின் 119 -வது ஜெயந்தி விழா மற்றும் 64 -வது குருபூஜை விழாவை முன்னிட்டு உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகில் நிறுவப்பட்டுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் பி.கே.மூக்கையா தேவர் திருஉருவ சிலைகளுக்கு அரசியல் கட்சியினர் மற்றும் சமுதாய அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.,

இதில் அகில இந்திய பார்வர்ட் ப்ளாக் கட்சியின் சார்பில் உசிலம்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி. வி.கதிரவன் தலைமையில் கட்சியினர் சிலம்பாட்டத்துடன் 100 க்கும் மேற்பட்ட முளைப்பாரி மற்றும் பால் குடம் ஊர்வலம் நடைபெற்றது.,

இந்த ஊர்வலம் உசிலம்பட்டி போக்குவரத்து பணிமனையிலிருந்து தேனி சாலை வழியாக வந்து தேவர் சிலைக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது.,

தொடர்ந்து திருவண்ணாமலை அடிகளார் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருஉருவ சிலைக்கு ருத்ராட்சை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்., அதனைத் தொடர்ந்து பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் பொன்னாடை அணிவித்து மீனாட்சிஅம்மன் சிலையை பரிசளித்தனர்.,