• Fri. Oct 30th, 2026

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு எம்வி கருப்பையா எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை..,

ByKalamegam Viswanathan

Oct 30, 2026

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மேட்டு நீரேதான் கிராமத்தில் உள்ள அவரின் திரு உருவ சிலைக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினரும் மதுரை வடக்கு மாவட்ட செயலாளருமான
எம் வி கருப்பையா எம் எல் ஏ மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ராஜேஷ் கண்ணா ஒன்றிய நிர்வாகிகள் வாடிப்பட்டி தமிழன் தாமு மதுரை மேற்கு சரவண கண்ணன் வழக்கறிஞர் தியாகராஜன் வாடிப்பட்டி பேரூர் பசுமணியன் மற்றும் வாடிப்பட்டி தெற்கு மற்றும் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் வாடிப்பட்டி பேரூர் சோழவந்தான் பேரூர் கழக நிர்வாகிகள் அலங்காநல்லூர் பாலமேடு ஒன்றியம் மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள் மகளிர் அணியினர் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட அனைத்து கிளைக் கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக மேட்டு நீரை தான் மந்தை திடலில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேவர் திருமகனாரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம்எல்ஏ கருப்பையாவுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் மரியாதை செய்யப்பட்டது.