• Thu. Oct 29th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

சோழவந்தானில் பிரபல நகைக்கடை உரிமையாளர் இல்ல திருமண விழா..,

ByKalamegam Viswanathan

Oct 29, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் மார்க்கெட் ரோட்டில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நகைக் கடை தொழிலில் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்று வரும் முத்துக்குமரன் நகை மாளிகையின் உரிமையாளர் ராஜா என்ற இருளப்பன் இல்ல திருமண விழா நேற்று காலை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசாமி கோவில் கோவிலில் நடைபெற்றது.

தொடர்ந்து கோவில் முன்பு இருந்த தனியார் திருமண மஹாலில் திருமண வரவேற்பு நடைபெற்றது. இதில் சோழவந்தான் மற்றும் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொழிலதிபர்கள் நகைக்கடை உரிமையாளர்கள் அடகு கடை உரிமையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் சமுதாய அமைப்பு தலைவர்கள் நண்பர்கள் உள்ளிட்டோர் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி சென்றனர்.

திருமணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் முத்துக்குமரன் நகை மாளிகை நிறுவனத்தின் சார்பில் தாம்பூலப் பைகள் வழங்கி அனைவருக்கும் தங்கள் நிறுவனத்தின் சார்பில் அதன் உரிமையாளர் இருளப்பன் என்ற ராஜா நன்றி தெரிவித்தார்.