கோவை விளாங்குறிச்சி பகுதியில், அடுத்த தலைமுறையினரின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வகையில் சாப்ட்வேர் துறையில் ஏற்பட்டுள்ள பல்வேறு தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ளும் வகையில் உருவாக்க பட்டுள்ள பயிற்சி மையமான லீலா ப்ளாசா துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் மற்றும் கவுண்டம்பாளையம் சட்ட மன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் ஆகியோர் இணைந்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். இந்த நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள்,பயிற்சி பெற உள்ள மாணவர்களை தனது மேஜிக் திறமையின் மூலமாக கட்டி போட்ட டாக்டர் டிஜோ வர்கீஸ். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர்
டிஜோ வர்கீஸ் கூறியதாவது.
இந்தியாவின் மிகபெரிய நிறுவனமாக திகழும் இந்த நிறுவனத்தின் ஊழியர்களை மகிழ்ச்சி படுத்தவும், அவர்களை மாயாஜாலம் மூலமாக மெய் சிலிர்க்க வைக்கவும் தனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது அதனை பயன்படுத்தி கொண்டுள்ளதாவும், பெரும் பாலும் இத்துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மனஅழுத்தம் அதிக அளவில் ஏற்படும் ஆனால் இத்தகைய மாயாஜால நிகழ்ச்சிகள் அதனை முழுமையாக அகற்றிவிடும் என்று தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் முறையான அனுமதி சான்றிதழ் பெற்ற ஹிப்னோடிசம் கலையை செய்து வருவதாகவும், இது சைக்காலஜி படி, மனிதர்களை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கும் ஒரு கலை அதனை செய்து வருவதாக கூறினார். மேலும் கனினி துறையில் பணியாற்றும் அனைவரது மன உளைச்சலை போக்க இத்தகைய கலைகளை ஊக்குவியுங்கள் என்று கூறியதுடன் தனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றிகளை கூறினார்.

தொடர்ந்து ஆக்ஸி க்ரூப் ஆப் கம்பெனிஸ் நிறுவனத்தின் இயக்குநர் கிருஷ்ணகுமார் கூறியதாவது..
ஆக்ஸி க்ரூப் கம்பெனிஸ் எனும் நிறுவனம் தமிழகத்தில் தங்களது கிளைகளை வலு படுத்தி வருகின்றது. 2016ம் ஆண்டு துவங்கபட்ட இந்த நிறுவனம், ஐடி நிறுவனத்திற்க்கான சாப்ட்வேர் உருவாக்குதல், மொபைல் போன் சாப்ட்வேர் உருவாக்குதல் போன்ற பணிகளை செய்து வருகின்றதாகவும், மேலும் மாணவ மாணவியர்களின் கல்வி கற்றலின் போதே பெரிய பெரிய ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் வாய்ப்புகளை உருவாக்க பல்வேறு கல்லூரிகளிலும் இணைந்து செயல்பட்டு வருகின்றதாக கூறினார். இங்கு துவங்கபட்டுள்ள லீலா பிளாசாவில் எங்களது பங்களிப்பானது அடுத்த தலைமுறையினர் பயண்படுத்தும் பல்வேறு துறை சார்ந்த பயிற்சி மையங்களை உருவாக்கி உள்ளதாக கூறினார்.




