• Tue. Oct 27th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

ஆட்டோவில் தப்பிச்செல்ல முயன்ற சிறை கைதியை மடக்கிப்பிடித்த தனி படை போலீசார்..,

ByAjmalkhan saleemraja

Oct 27, 2026

தேனி மாவட்ட தேக்கம்பட்டியில் உள்ள சிறைச்சாலையில் 17 சிறை கைதிகள் நேற்று இரவு தப்பிய நிலையில் இதுவரை நான்கு சிறை கைதிகளை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

மேலும் தப்பி ஓடிய சிறை கைதிகளை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த நிலையில் கானா விளக்கு அருகே ஆட்டோவில் சென்று கொண்டிருந்த ஐந்தாவது விசாரணை கைதியை தனிப்படை போலீசார் கைது செய்து அதே ஆட்டோவில் தேக்கம்பட்டி சிறைக்கு அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து ஆட்டோ ஓட்டுனர் கூறுகையில் கண்டமனூர் அருகே வந்து கொண்டிருந்தபோது லிங்க பிரசாத் என்பவர் தனது ஆட்டோவில் ஏறியதாகவும்

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இறக்கிவிடுமாறு கூறியதாக தெரிவித்தார். ஜிபே மூலம் பணம் அனுப்புகிறேன் என்னை மருத்துவமனையில் இறக்கி விட தெரிவித்துள்ளார்.

கானாவிளக்கு அருகே இருசக்கர வாகனத்தில் வந்த போலீசார் தனது ஆட்டோவை நிறுத்திய போது தான் லிங்க பிரசாத் என்பவர் சிறை கைதி என தெரியவந்தது என ஆட்டோ ஓட்டுனர் தெரிவித்தார்.

பின்னர் தனது ஆட்டோவில் போலீசார் லிங்க பிரசாத்தை தேக்கம்பட்டி சிறை வளாகத்திற்கு அழைத்து வந்தனர் என தெரிவித்தார்.