• Sat. Oct 24th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

மாமன்னர் மருது பாண்டியர்கள் குருபூஜை விழா..,

Byமுகமதி

Oct 24, 2026

மாமன்னர் மருது பாண்டியர்கள் குருபூஜை விழாவில் ஆயிரம் பயனாளிகளுக்கு நிலவேம்புக் குடிநீர்ப் பொடி பாக்கெட்டுகளை முன்னாள் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர் ஜி ஆனந்த் வழங்கினார்!

ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்து முதல் சுதந்திரப் போராட்டத்தை நடத்திய
மாமன்னர் மருது பாண்டியர்கள் நினைவு நாள் விழா புதுக்கோட்டை திலகர் திடல் ஏவிசிசி கல்விக்குழுமத்தில் முன்னாள் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர். ஜி.ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த ஆதிசாய் ஐஏஎஸ் அகாடமியின் தலைவர் ஏவிசிசி கணேசன் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு குறித்த வித்தியாசமான வினாடி வினாப் போட்டியை நடத்தினார்.

கடந்த மாதம் நாளிதழ் ஒன்றின் பெண்கள் மலரில் வெளியான கட்டுரையின் அடிப்படையில் தொடர் மழையால் ஏற்படும் தொற்று நோய்களை முன்கூட்டியே தடுப்பது எப்படி என்ற விழிப்புணர்வுப் பிரசுரங்களையும் அரசு அங்கீகாரம் பெற்ற நிலவேம்புக் குடிநீர்ப் பொடிப் பாக்கெட்டுகளையும் ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் வழங்கி சிறப்புரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் டாக்டர் லதா மகேஸ்வரி கலந்து கொண்டார். ஏவிசிசி பள்ளித் தாளாளர் திருமதி மல்லிகா கணேசன் அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து பழைய பேரூந்து நிலையத்தில் நடைபெற்ற மருது சகோதரர்கள் நினைவேந்தலில் பங்­கேற்ற டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் மருது பாண்டியர்கள் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன் அன்னதானத்தில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு நிலவேம்பு பொடி பாக்கெட்டுகளை வழங்கினார்.