சுதந்திரப் போராட்ட வீரர்களாகவும் மன்னர்களாகவும் இருந்த மருதுபாண்டியர் சகோதரர்களுக்கு இன்று பல இடங்களில் குருபூஜை நடத்தப்பட்டது. அவர்கள் இருவரும் தாங்கள் கொல்லப்படுவதற்கு முன்பாக ஆங்கிலேயர் அவர்களிடம் தங்களது கடைசி விருப்பத்தை கேட்ட போது இருவரும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தாங்கள் கொல்லப்பட்டு விடுவோம் என்பதை அறிந்ததால் தலையை ஓர் இடத்திலும் உடலை ஓரிடத்திலும் புதைக்க வேண்டும் என்பதால் ஆங்கிலேய அரசாங்கம் அவ்வாறு செய்தது.

அதனால் திருப்பத்தூரிலும் காளையார் கோவிலிலும் அவர்களுக்கு குரு பூஜை நடந்தாலும் மறவர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இருக்கும் பகுதிகளிலும் ஆங்காங்கே அவர்களுக்கு குருபூஜை நடத்தப்படுகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற குருபூஜை விழாவில் மருது பாண்டியர் சகோதரர்கள் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியும் குத்து விளக்கு ஏற்றியும் அவர்கள் நினைவாக அன்னதான நிகழ்வும் நடைபெற்றது.

புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா தலைமையில் அந்த இனத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் தொழிலதிபர்கள் பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வுகளை நடத்தினார்கள்.




