• Sat. Oct 24th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள் அவதி சீரமைக்க சாலைகளில் நாற்று நட்டு போராட்டம்..,

ByKalamegam Viswanathan

Oct 24, 2026

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள திருநகர் (எஸ் ஆர் வி நகர்) பகுதியில் உள்ள பாலாஜி நகரில் அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

திருநகர் பாலாஜி நகர் பகுதியில் எட்டு தெருக்களில் உள்ளனசுமார் 1800க்கும் மேற்பட்ட வீடுகளில் 5000 பேர் வசித்து வருகின்றனர்.

பாலாஜி நகர் விரிவாக்க பகுதியில் பகுதியில்பாதாள சாக்கடை அமைக்கும் பணி கடந்த நான்கு மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இதில் சாலைகள் குண்டும் குழியுமாக புதைகுழி போல் காட்சியளிக்கிறது மேலும் மழைக்காலங்களில் நீர் தேங்கி பொதுமக்கள் திருநகர் மற்றும் எஸ் ஆர் வி நகர் செல்ல பெரிதும் சிரமம் ஏற்படுகிறது இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் கார் செல்ல முடியாமல் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

குண்டுங்குழியுமான சாலைகளால் இப்பகுதி மக்களுக்கு தேவையான வாகனங்களில் விற்பனையாகும் குடிநீர் சாலை வசதிகள் இல்லாமல் உள்ளே வர மறுக்கின்றனர்.மேலும் குடிநீர் வாகனம் சாலையில் உள்ள பள்ளத்தில் சிக்கி வெளியேற முடியாமல் பிரச்சனை ஏற்படுகிறது இதனால் குடிநீர் விற்பனையாளர்கள் இந்தப் பகுதிகளுக்கு வரமறுக்கின்றனர் இதனால் குடிநீர் கிடைப்பதில் மிகவும் சிரமமாக உள்ளது.

மேலும் பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளுக்கு இரு சக்கர வாகனங்கள் சாலைகளில் செல்ல முடியாமல் சிக்கிக் கொள்வதால் பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில் பிரச்சனை ஏற்படுகிறது மீண்டும் கார் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் சேரும் சகதிமான சாலைகளில் செல்வதில் சிக்கி கொள்கின்றன இதனால் தங்களது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வெளியே எடுக்க முடியாமல் இப்பகுதி மக்கள் கடந்த நான்கு மாதங்களாக அவதிப்படுகின்றனர் இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் மாமன்ற உறுப்பினர் மட்டும் சட்டமன்ற உறுப்பினரும் தொகுதி அமைச்சருமான நிர்மல் குமார் முதலமைச்சர் தனிப்பிரிவு என பல்வேறு பகுதிகளில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இப்பகுதி மக்கள் விரக்தியில் உள்ளனர்.

சட்டத்துறை மற்றும் மின்துறை அமைச்சருமானநிர்மல் குமார் தொகுதி ஆன திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள திருநகர் பாலாஜி நகர் பகுதி மக்களுக்கு விடிவு கிடைக்குமா? மழைக்கு முன்னே சேரும் சகதியுமான சாலைகளை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்