மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரில் பழமையான கோட்டைக்கல் சிவன் கோவில் அமைந்துள்ளது.,

இக்கோவில் புனரமைப்பு பணிகள் நடைபெறுவதால் பாலாலயத்தில் மூலவர் சிவன் சாமி சிலைக்கு ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு
பால்,தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.,

தொடர்ந்து சிவன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்க சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.,
இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து சிவனை வழிபட்டனர்., தொடர்ந்து பக்தர்களுக்கு பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது.,





