மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வேளாண்மை கோட்டம் சார்பாக மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் குட்லாடம்பட்டியில் விளைநிலம் வேளாண்மை தொழில் நுட்ப காப்போம் இயக்கமுகாம் நடந்தது.

இம்முகாமிற்கு வேளாண்மை உதவி இயக்குநர் பாண்டி தலைமை தாங்கி வேளாண்மைத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், பிரதம மந்திரி கௌரவ நிதி திட்ட அவசியம் பற்றியும், தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் பதிவு செய்திட வேண்டும் என்றும் விளைநிலம் பாதுகாப்பது பற்றியும் எடுத்துக்கூறினார்.
மேலும் வேளாண்மை துணை இயக்குநர் (மாநில திட்டம்) மேரி ஐரின் ஆக்னிட்டா விளை நிலம் பாதுகாப்பு மற்றும் மண் மாதிரி பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயிர்களின் நிலைக்கு ஏற்றவாறு பயன்படுத்தும் முறைகளையும், கோடை உழவு பயன்பாடுகள் இயற்கை உரம் பயன்படுத்தல், பசுந்தளை உரங்களை பயன்படுத்தல் பற்றி விளக்கினார். வேளாண்மை அலுவலர் டார்வின் வேளாண்மைத் துறை மூலம் வழங்கப்படும் இடு பொருட்கள் பற்றியும் எடுத்துக் கூறினார்.

வட்டார தொழில் நுட்ப மேலாளர் பிரியா விவசாயிகளின் தனித்துவ அடைய எண் பதிவின் முக்கியதுவம் பற்றி விளக்கினார். முடிவில் உதவி தொழில் நுட்ப மேலாளர் அருணாதேவி நன்றி கூறினார். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில் நுட்ப மேலாளர் பூமிநாதன், அருணாதேவி ஆகியோர் செய்திருந்தனர் .




