• Wed. Oct 21st, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

சேதம் அடைந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கோரிக்கை..,

ByKalamegam Viswanathan

Oct 21, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக சாலையில் மழை நீர் தேங்கியதால் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

குறிப்பாக சோழவந்தான் வட்ட பிள்ளையார் கோவில் ஆர் எம் எஸ் காலனி பசும்பொன் நகர் ரயில்வே மேம்பாலம் ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கி சாலைகளில் நடுவில் பள்ளங்கள் ஏற்பட்டு குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

ஆகையால் உயிர் சேதம் ஏற்படும் முன் சோழவந்தான் பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.