• Mon. Oct 19th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

குலசேகரன் கோட்டைமீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா திருவிளக்கு பூஜை..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டையில் பழமையும் பெருமையும் வாய்ந்த குலசேகர பாண்டிய மன்னர் கட்டப்பட்ட வரலாற் று சிறப்புமிக்க மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா கடந்த 11ம் தேதி ஞாயிற்றுகிழமை தொடங்கியது.

தினந்தோறும் மாலை 6 மணிக் கு ராஜராஜேஸ்வரி அர்த்தநா ரீஸ்வரர் கோலாட்டம், பட்டாபிஷேகம், தபசு, ஊஞ்சலாட்டம்,சியாமளா தேவி, மகிஷாசுவர்த்தினிஆகிய அலங்கார ங்களில் அம்மன் அருள்பாலித்தார்.

8ம்நாள் துர்கா அஷ்டமியை முன்னிட்டு உலக நன்மைக்காகவும், மழை வர வேண்டியும்,விவசாயம் தொழில்கள் சிறக்கவும்,மக்கள் நலமுடன் வாழவும் வேண்டி
பக்தி சொற் பொழிவாளர் தேசமங்கையர்கரசி தலைமை தாங்கி திருவிளக்கு பூஜை மற்றும் கூட்டு பிரார்த்தனையை தொடக்கி வைத்தார்.

இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை வழிபாடு செய்தனர்.இரவு 8.30மணிக்கு மீனாட்சி அம்மனுக்கு துர்கா அஷ்டமி அர்த்த ஜாம பூஜை நடைபெற்றது .இதன் ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழுவினர் மற்றும் குலசேகரன் கோட்டை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.