அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 55 ஆண்டு தொடக்க விழாவில் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
தற்போது நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக
தவெக கட்சியை சேர்ந்த பூமிபாலன் பதுக்கி வைத்திருந்த 135 கோடி மதிப்புள்ள உயர் ரக போதைப் பொருளை,மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தார்கள். இது தொடர்பாக ஆளுங்கட்சியை சேர்ந்த தவெக நிர்வாகிகள் வீட்டில்11 மணி நேரம் சோதனை நடத்தப்பட்டு 4 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ராமேஸ்வரம், தூத்துக்குடி மற்றும் நாகப்பட்டினம் ஆகிய கடலோர பகுதிகள் இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளதை வாய்ப்பாக பயன்படுத்தி படகுகள் மூலம் மிக விரைவாக பொருட்களை சட்ட விடுவதாக கடத்தி வருவது ஒரு தொடர் நிகழ்வாக இருக்கிறது.
இந்த ஆண்டில் மட்டும் இலங்கைக்கு, தமிழகத்திலிருந்து சுமார் 55 டன் பீடி இலைகள், சுமார் ஒரு டன் கஞ்சா மற்றும் மில்லினுக்கு அதிகமாக போதை மாத்திரைகளை கைப்பற்றியுள்ளது அதிர்ச்சி தரும் புள்ளி விவரமாக உள்ளது.
இந்தியா, இலங்கை கடல் எல்லையில் நடக்கும் சட்ட விரோத கடத்தல் சம்பவங்களை தடுக்க தவெக அரசு என்ன நடவடிக்கை? என்ன முனைப்பு காட்டி வருகிறது? என்பதற்கான தவெக அரசின் இலட்சணம் தான் .

நாகை தவெக நிர்வாகி வீட்டில 135 கிலோ மெத் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள செய்தி தவெக நிர்வாகியின் போதை பொருள் கடத்தலுக்கு தவெக அரசே துணை இருக்கிறதோ? இல்லையென்றால் இவ்வளவு பெரிய போதை பொருள் கடத்தல் நெட்வொர்க் கடத்தல் மன்னனாக பூபாலன் முதல்வரின் ஆசி இல்லாமல் இருந்த போதைப்பொருள் கடத்தலை நடத்திட முடியுமா என்கிற கேள்வி தமிழகத்தில் எழுந்திருக்கிறது. முதல் விஜய் அவர்களே திஸ் வெரி டேஞ்சரஸ் ,திஸ் வெரி வெரி ராங் ப்ரோ என்று தமிழக மக்கள் இன்றைக்கு முதல்வருக்கு கேள்வி கேட்கிறார்கள்
அன்றைக்கு ஜாபர் சாதிக் பெயரை யாரும் தமிழ்நாட்டில் மறக்க முடியாது. அந்த போதைப் பொருள் மன்னால் 2000 கோடி போதை பொருள் நடைபெற்றது . அப்போது திமுக அரசு சர்வதேச கடத்தலை சத்தம் இல்லாமல் கடந்து போனதால் திமுக ஆட்சி பறிபோனதற்கு காரணம்.என எல்லோரும் பேசுகிறார்கள்
ஆட்சியாளர்களும் சரி, காவல்துறை அதிகாரிகளும் சரி எச்சரிக்கையோடு கையாளுவார்கள் என்று தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்த்தார்கள் ஆனால் அவர்கள் கையாண்ட விதம், வாய் திறக்காமல் அன்று முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆட்சியில் மௌனம் காத்துதான் அவரே இன்றைக்கு கொளத்தூரில் தோல்வி அடைய வேண்டிய நிலைமை தமிழக மக்கள் உருவாக்கினார்கள் என்பதை விஜய் மறந்துவிடக் கூடாது.

ஏனென்றால் போதைப் பொருள் கடத்தலுக்கு துணை போன திமுக ஆட்சியின் நீட்சியாக இன்றைய தவெக ஆட்சி துணை போகிறதோ? இன்று போதைப் பொருள் கடத்தலுக்கு துணை இருக்கிறதா அரசு என்று அதிர்ச்சியில் தமிழகம் உறைந்து போயிருக்கிறது.
முதல்வர் விஜய் அவர்களே மிக எச்சரிக்கையாக கையாள வேண்டிய மிக முக்கியமான விவகாரம் ஆகவே எப்போதும் போல இதுகுறித்து உங்கள் தவெக ஐடிவிங்கில் பதிலடி கொடுத்துவிட்டு ,மக்களுக்கு தேவையான தீர்வுகளுக்கு காணாமல் சென்றால் அது மிகப்பெரிய உங்கள் ஆட்சிக்கு பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு, திமுக ஆட்சி ஆட்சியை இழந்து, 13 .24 சதவீதம் வாக்குகள் இழந்ததற்கு போதை பொருள் கடத்தல் முக்கிய காரணம்.
தமிழ்நாட்டு மக்களுக்காக திமுகவிடம், நீங்கள் பல கேள்விகளை கேட்டீர்கள் மக்களுக்காக தான் கேள்வி கேட்கிறார் என்று நினைத்தனர் ஆனால் நீங்கள் போதை போல் கடத்தலுக்கு கேட்ட கேள்வி எல்லாம் இப்போது உங்கள் ஆட்சியில் கேள்வியாக தொடர்கிறது அதை மிக எச்சரிக்கோடு கையாண்டு தீர்வு காண விஜய் தீர்வு காண வேண்டும்.
அதிமுக 55 ஆண்டுகளில் 31 ஆண்டு ஆட்சி செய்துள்ளது. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தொடங்கிய இந்த கட்சியை புரட்சித்தலைவி அம்மா வளர்த்தெடுத்தார் . எடப்பாடியார் கட்டிக் காத்து வருகிறார். சத்துணவு திட்டம், குடிமராமத் திட்டம் ,69 இட ஒதுக்கீடு, 7.5 சகவித இட ஒதுக்கீடு தந்த கட்சி.
புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா கொண்டாடுகிற போது அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆளும் கட்சியாக இருக்க வேண்டும் என்ற புரட்சித்தலைவி அம்மா கண்ட கனவுகளை தமிழ்நாட்டு மக்கள் நனவாக்கினார்கள்

அதேபோல இன்றைக்கு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 55வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது 100 ஆண்டுகள் இந்த மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் அம்மா ஆணையிட்டுள்ளார்கள் அவருடைய அந்த சொல்லுக்கு உயிர் கொடுக்க தமிழ்நாட்டின் மக்கள் என்றைக்கும் துணை இருப்பார்கள் .
காற்றுக்கு இலைகள் வேண்டுமானால் அசையலாம் ,மலர்கள் வேண்டுமானாலும் செய்யலாம், கொடிகள் வேண்டுமானாலும் அசையலாம் ,ஏன் காற்றுக்கு மரங்கள் கூட அசலாம் ஆனால் எவ்வளவு காற்று அடித்தாலும், சூறாவளி காற்று அடித்தாலும் மலைகள் ஒருநாளும் அசைவதில்லை .
அதே போல தான் இன்றைக்கு அடிக்கிற சூறாவளி காற்றில் மக்களுக்காக சுழன்று கழகம் மக்களுக்காக உழைக்கும் தவிர ,ஒரு நாளும் அது அசைந்து விடுவதில்லை அதிமுகவின் பலமே தொண்டர்களுடைய உழைப்பு, தமிழ்நாட்டு மக்களின் ஆதரவு, இறைவனின் ஆசியும் தான் மீண்டும் அம்மாவின் ஆட்சி எடப்பாடியாரின் தலைமையில் அமையும் என கூறினார்.



