• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

வாடிப்பட்டி பேரூராட்சியில்செயல் அலுவலர் கண்டித்து துப்புரவு பணியாளர்கள் போராட்டம்..,

மதுரை மாவட்டம் வாடிப் பட்டி பேரூராட்சியில் 18வார்டுகள் உள்ள து.இதில் சேகரிக்கப்படும் குப்பைக ளை அகற்றுவதற்காக 10 நிரந்தர பணியாளர்களும், 85 ஒப்பந்த பணியாளர்களும் துப்புரவு பணி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அந்த துப்புரவு பணியாளர்களுக்கு செயல் அலுவலர் ஆளவந்தான் மாதந்தோறும் 5 ஆம் தேதி வழங்க கூடிய ஊதியத்தினை காலம் தாழ்த்தி 15 ஆம் தேதிக்கு மேல் வழங்குவது மற்றும் மன வேதனை படும்படியாகவும் கடுமையாகவும் தொடர்ந்து பேசுவதை கண்டித்து திடீரென்று இன்று காலை 6:00 மணி க்கு பேரூராட்சி அலுவலகம் முன்பாக உள்ளிருப்பு போராட்டம் செய்தனர்.. தகவலறிந்த பேரூராட்சித் தலைவர் பால் பாண்டியன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

மேலும் செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வாடிப் பட்டி காவல் நிலையத்தில் துப்புரவு பணியாளர்கள் புகார் கொடுத்துவிட்டு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக் கோரி தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் செய்து வருகின்றனர்.இந்த போராட்டத்தினால் துப்புரவு பணியில் பாதிக்கப்பட்டது.