• Thu. Oct 15th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

கிராமப்புறப் பகுதிகளில் சாலை விபத்துக்களை தடுக்க கோரிக்கை மனு..,

Byமுகமதி

Oct 15, 2026

புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் சாலை விபத்துக்களை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்கவேண்டுமென சட்ட உரிமைகள் நுகர்வோர் மேம்பாட்டுக் கழகத்தின் நிறுவனர் – மாநிலத் தலைவர் வழக்கறிஞர் முனைவர் கு.ஜெகன் வலியுறுத்தினார்.

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் சமீப காலமாக அதிக அளவில் சாலை விபத்துக்கள் நடந்துகொண்டே இருக்கிறது. குறிப்பாக புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட சாலைகளில் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதனால் தடுமாறி வாகனத்திற்குள் விழுந்து விபத்து ஏற்பட்டு மரணம் அடைகின்றனர். இரு சக்கர வாகனங்களில் மூன்று நபர்களுக்கு மேலாக ஏறி பயணம் செய்கின்றனர். நம்பர் பிளேட் இல்லாத வாகனங்கள் அதிகமாக இயங்குகிறது.

காவல்துறையினர் முக்கிய இடங்களில் கண்காணிக்க வேண்டும், காவல்துறையினர் சார்பில் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமரா வைக்கப்பட்டுள்ளது அதனை ஆய்வு செய்து தவறுள்ள வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கியப் பகுதிகளில் காவல்துறை ரோந்துப் பணியை துரிதப்படுத்த வேண்டும், சாலை விபத்துக்கள் குறித்து விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்ய வேண்டும். தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் நகர்ப்புறங்களில் வரும் போது மெதுவாகவும், ஒலி எழுப்பிக்கொண்டு வர வேண்டும். சிறுவர்கள் அதிக அளவில் வாகனங்களை இயக்குகின்றனர்.

மது போதையில் அதிக அளவில் வாகனத்தை இயக்குகின்றனர். ஆகவே காவல் துறையினர் முக்கிய இடங்களில் வாகன சோதனைகளில் ஈடபட வேண்டும். சாலை விபத்துக்களைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சட்ட உரிமைகள் நுகர்வோர் மேம்பாட்டுக் கழகத்தின் நிறுவனர் – மாநில தலைவர் வழக்கறிஞர் முனைவர் கு.ஜெகன் கோரிக்கை மனு அளித்தார். உடன் மாநில ஒருங்கிணைப்பாளர் முருகேசன், மாநில தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் இதயம் முரளி, மனித உரிமை அமைப்பு மாநில செயலாளர் ஹக்கீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.