புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று ஓபிசி மக்கள் உரிமைக்கான கட்சியின் மத்திய மண்டல செயலாளர். சரவண தேவா தலைமையில் 30க்கும் மேற்பட்ட ஜாதி சங்கங்கள் சேர்ந்த தலைவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

2027-இல் நேர்மையான சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் தற்போதைய கணக்கெடுப்பு பணியை நிறுத்திவிட்டு மாநில வாரியான ஓபிசி பட்டியில் குறியீடுகளை உள்ளடக்கி அதனை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

குறிப்பாக அரசு தெளிவற்ற பொது நிலைப்பாட்டை கைவிட்டு வளங்களை சமமாக பகிர்ந்து இருப்பதை உறுதி செய்யும் வகையில் விரிவான சாதிவாரி தரவுகளை வெளியிடுவதில் உறுதியான நிலைபாட்டை எடுக்க வேண்டும் என்றும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பட்டியல் ஜாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் இந்தியாவின் மக்கள் தொகையில் பெரும்பான்மையினராக உள்ளனர்.

எனவே துல்லியமான மற்றும் நேர்மையான புள்ளி விவரங்கள் இல்லாவிட்டால் இலக்கு வைக்கப்பட்ட நலத்திட்ட கொள்கைகள் கல்வி இட ஒதுக்கீடு மற்றும் நிதி ஒதுக்கீடு ஆகியவள் குறைபாடு உடையதாகவும் மாறிவிடும் எனவே 2027 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு முழுமையான உள்ளடக்கிய தன்மையுடனும் வெளிப்படை தன்மையுடனும் துள்ளியத்துடனும் இருப்பதை உறுதி செய்ய மாண்புமிகு இந்திய குடியரசு தலைவர் அவர்கள் இது தலையிட வேண்டும் என்றும் தற்போதைய கணக்கெடுப்பு பணியை நிறுத்திவிட்டு மாநில வாரியான ஓபிசி பட்டியலின் குறியீடுகளை உள்ளடக்கி கலப்பு முறையில் அதனை மீண்டும் தொடங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.




