• Thu. Oct 15th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

புதுக்கோட்டையில் சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க கோரி சாலை மறியல்..,

ByS. SRIDHAR

Oct 15, 2026

புதுக்கோட்டை மச்சுவாடியில் இருந்து டிவிஎஸ் ரவுண்டானா வரை நடைபெற்று வரும் சாலை விரிவாக்கப் பணி பல மாதங்களாக நிறைவடையாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதனை கண்டித்தும், பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தியும் பொதுமக்கள் சார்பாக இன்று காலை டிவிஎஸ் ரவுண்டானா அருகில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் SDPI கட்சியின் மாவட்ட தலைவர் H. ஸலாஹுதீன் அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கைக்குஆதரவு தெரிவித்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலை விரிவாக்கப் பணியை விரைந்து முடித்து தருவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து, சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.