மதுரை மாவட்டம் சோழவந்தான் மேலக்கால் மன்னாடிமங்கலம் சித்தாலங்குடி உள்ளிட்ட மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு மேம்படுத்துதல் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கான மகப்பேறு மருத்துவம் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் ஆகியவை குறித்து மருத்துவ இணைஇயக்குனர் ராமச்சந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் மேலக்கால் மன்னாடிமங்கலம் சித்தாலங்குடி ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சோழவந்தானில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு சிகிச்சைகள் உரிய முறையில் நடைபெறுவதில்லை என தொடர்ந்து புகார்கள் எழுந்த நிலையில் குழந்தை பேருக்காக வரும் கர்ப்பிணி பெண்களை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பரிந்துரைப்பதாகவும் இதன் காரணமாக கர்ப்பிணி பெண்களுக்கான சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதாக மருத்துவத்துறை இணை இயக்குனருக்கு புகார் வந்ததன் அடிப்படையில் சோழவந்தான் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இணை இயக்குனர் மருத்துவமனைக்கு ஆய்வுக்கு வந்தபோது மருத்துவ சிகிச்சைக்காக வந்தவர்கள் எண்ணிக்கை மிக அதிக அளவில் இருந்ததால் மருத்துவ சிகிச்சை கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் சோழவந்தான் மருத்துவமனை சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும் போதிய இடவசதி இல்லாத நிலையில் நோயாளிகள் மற்றும் உடன் வருபவர்கள் தங்குவதற்கு இடம் இல்லாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் பொதுமக்கள் கூறினார்கள் இணை இயக்குனர் வந்த போது மருத்துவமனையில் துப்புரவு பணிகளை மேற்கொண்டது இணை இயக்குனர் ஆய்வுக்கு வந்த காரணத்தால் சுகாதாரப் பணிகள் மேற்கொண்டதாக பொதுமக்கள் கூறினார்கள்.

இதனால் கடும் அதிருப்தி அடைந்த மருத்துவ இணைய இயக்குனர் மருத்துவர் மற்றும் பணியாளர்களை எச்சரித்த நிலையில் மருத்துவமனையில் மருந்துகள் கையிருப்பு நோயாளிகளுக்கான படுக்கைகள் கூடுதல் கட்டிடங்கள் கட்டுமான பணிகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார். அப்போது மருந்துகள் இருப்பு மருத்துவ உபகரணங்கள் ஆகியவை போதிய அளவில் இல்லாதது கண்டு மருத்துவமனை பணியாளர்களை கடிந்து கொண்டார். மேலும் இயக்குனர் வந்தபோது நோயாளிகள் அதிக அளவில் இருந்த நிலையில் விரைவில் போதிய பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
மேலக்கால் மன்னாடிமங்கலம் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த நான்கு மாதங்களில் ஒன்றிரன்று பிரசவங்கள் மட்டுமே நடைபெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில் அது குறித்து ஆய்வு மேற்கொள்ள வந்ததாக கூறிய இணை இயக்குனர் காலி பணியிடங்கள் கூடுதல் கட்டிட பணிகள் மகப்பேறு மருத்துவம் ஆகியவை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தியாளர்களிடம் கூறிச் சென்றார்.




