• Wed. Oct 14th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

மதுரையில் எஸ்.ஆர். குரூப் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் இல்ல வரவேற்பு விழா..,

ByKalamegam Viswanathan

Oct 14, 2026

​மதுரை கருப்பாயூரணியில் உள்ள MP மஹாலில், S.R. GROUP அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் இல்ல வரவேற்பு விழா (வலிமா) மிகச் சிறப்பாக நடைபெற்றது.
​

இவ்விழாவில் மணமக்கள் Er.S. ரியாஸ் அஸ்லம் B.E., – Dr.H. ரைஸா ஃபாத்திமா B.D.S., ஆகியோருக்கு அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் திரளாகக் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

​சிறப்பு விருந்தினர்களாக, முன்னாள் வணிகவரித்துறை அமைச்சர் பி. மூர்த்தி, முன்னாள் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா மற்றும் பிரபல நகைச்சுவை பேச்சாளரும் பேராசிரியருமான முனைவர் டாக்டர் ஞானசம்பந்தம் ஆகியோர் நேரில் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.

மேலும், இவர்களுடன் பல துறை சார்ந்த முக்கியப் பிரமுகர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.