தவெக ஆட்சி பொறுப்பேற்று பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு இல்லை என முடி மறைப்பதுதான் கொடுமையிலும் கொடுமையாக வெந்த புண்ணில் வேலை பாய்ச்சவதாக அமைந்துருக்கிறது.

அரிசி, பருப்பு, சர்க்கரை ,எண்ணெய் வெங்காயம் உள்ளிடவை உச்சம் பெற்றுள்ளது . கடந்த நான்கு மாதங்களில் மற்றும் அரிசி விலை 30 சதவீதம் அளவிற்கு விலை உயர்ந்து விட்டது. வட மாநிலங்களில் இருந்து விளைச்சல் குறைந்து விட்டதாக கூறி பருப்பு விலையும் அதிகரித்து விட்டது. 110 ரூபாயாக இருந்தது துவரம் பருப்பு தற்போது 150 ரூபாயாக தாண்டி விற்கப்படுகிறது.
பூண்டு விலை 250 ரூபாய்க்கு உயர்ந்து விட்டது. சூரியகாந்தி எண்ணெய் விலையும் உயர்ந்து விட்டது. மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் வெங்காயவரத்து குறைந்து விட்டதால் அதன் நிலையும் உயர்ந்து விட்டது. அதனைத் தொடர்ந்து சர்க்கரை விலையும் அதிகரித்தது.

ஏற்கனவே 38,000 கோடி கடனை அரசு வாங்கி விட்டது தற்போது கடன் சுமை மேலும் ஏற்படும் வகையில் வெளிச்சந்தையில் 4,500 மெகாவாட் மின்சாரத்தை 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்யும் பொழுது கூடுதலாக ஒரு லட்சம் கோடி நிதிச் சுமை ஏற்படும் .தற்பொழுது தவெகஅரசு திட்டமிட்டு அதிக விலைக்கு வெளிச்சந்தையில் கொள்முதல் செய்ய முயற்சிக்கிறதா என்று மக்கள் விமர்சித்து வருகிறார்கள்.
அதிமுக ஆட்சி காலத்தில் மின்சாரத்தை உற்பத்தி செய்தோம் பற்றாக்குறை ஏற்பட்ட பொழுது குறைந்த விலைக்கு தான் மின்சாரம் வாங்கப்பட்டது குறிப்பாக 2011 அம்மாவின் ஆட்சியின்போது ஒரு யூனிட்டுக்கு 4.75 ரூபாய், தொடர்ந்து 2012 ஆண்டில் 6.35 ரூபாய், 2013 ஆண்டில் 5.20 ரூபாய், 2014 ஆண்டு 5.40 ரூபாய், 2015 ஆண்டு 5.50 ரூபாய், 2017 ஆண்டு 5.50 ரூபாய், 2018 ஆண்டு 5.48 ரூபாய் ,2019 ஆண்டு 5.48 ரூபாய் ,2020 ஆண்டு 5.48 ரூபாய் வாங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து 2021 முதல் 2026 வரை திமுக ஆட்சியில் 11.50 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்டது .அம்மாவின் ஆட்சியில் ஒரு யூனிட் மின்சாரம் 4.75 ரூபாய் முதல் 5.50 ரூபாய் வரை தான் மின்சாரம் வாங்கப்பட்டது. அதேபோல திமுக ஆட்சியில் 20 ரூபாய்க்கு வாங்கப்பட்டது தற்பொழுது 35 ரூபாய் கொள்முதல் செய்யப்பட்டதை தவெக அரசு நியாயப்படுத்தி வருகிறது .

பண வீக்கத்திலும், விலைவாசி உயர்வில் இந்தியாவில் தமிழகம் முதன்மை மாநிலம் உள்ளது தமிழகத்தில் 6.81 சதவீதம் விலைவாசி உள்ளது .அதேபோல மற்ற மாநில எடுத்துக் கொண்டால் ஓடிசா 6.70 சதவீதம், மத்திய பிரதேசம் 6.68 சதவீதம், தெலுங்கானா 6.64 சதவீதம், ஆந்திர பிரதேசம் 6.29 சகவீதம், உத்திரபிரதேசம் 6.08 சதவீதம், லடாக் 5.90 சதவீதம், கர்நாடகா 5.86 சதவீதம், ராஜஸ்தான் 5.71 சதவீதம், பீகார்5.48 சதவீதம், உத்தரகாண்ட் 5.47 சதவீதம், கேரளா 5.26 சதவீதம் ,பஞ்சாப் 5.27 சதவீதம் மகாராஷ்டிரா 5.18 சதவீதம், குஜராத் 5.11 சதவீதம் ,மணிப்பூர்5.10 சதவீதம், சத்தீஸ்கர் 5 சதவீதம், சீக்கிம் 4.83 சதவீதம், அசாம் 4. 62 சதவீதம், சண்டிகார் 4.39 சதவீதம் ,ஹரியானா 4.37 சதவீதம், ஜம்மு காஷ்மீர் 4.27 சதவீதம்,மேற்கு வங்காளம் 4.04 சதவீதம், கோவா 3.92 சதவீதம் டெல்லி 3.40 சதவீதம் இப்படி 33 மாநிலங்களில் இந்தியாவிலேயே பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வில் அதிகமான உள்ள மாநிலம் தமிழகம் தான்.
அதேபோல கடந்த நான்கு மாதங்களாக எதில் முதலிடம் என்றால் விண்ணை மட்டும் விலைவாசியில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது .முதல்வர் விஜய் இதற்கு வாய்திறப்பாரா ?
பல்வேறு மாநிலங்களில் சென்று தன்னை விளம்பரப்படுத்தி கொள்ள அக்கறை செலுத்துகிறார் முதலமைச்சர் ஆனால், உள்நாட்டில் பிரச்சனைகள் பற்றி எரிக்கிறது இதற்கெல்லாம் வாய் திறக்க முன்வருவாரா ?மக்கள் மீது முதல்வர் அக்கறை செலுத்துவாரா? தற்போது வடகிழக்கு பருவமழை விரைவில் வரவள்ளது இதற்கு தகுந்த முன்னேற்பாடு எடுக்க அரசு முன்வருமா?ஆனால் அடுத்த கட்சியை அபகரிக்க நேரத்தை அரசு வீணடித்து வருகிறது.
அடுத்த கட்சியை கொள்முதல் செய்வதற்கு தான் தவெகவிற்கு தலைக்கு மேல் வேலை உள்ளது. 15 பேர்கள் இன்னும் வருவார்கள் என கூறுவது குதிரை பேரமாகும் .

தற்போது இந்த பிரச்சனைக்கு மத்திய அரசு மீது தவெக அரசு பழி போட்டு தப்பிக்க முயற்சிக்கிறது இதற்கு உரிய தீர்வை அரசு காணவில்லை .
நடைபெற்ற இடைத்தேர்தலில் தங்க பதக்கத்தை பெற்றுள்ளோம் ,அதிமுக வெண்கல பதக்கத்தை பெற்றுள்ளது என்று தவெக கூறுகிறார்கள். இன்றைக்கு இந்த 4 மாதத்தில் விலைவாசி உயர்விலும் ,மின்சார பிரச்சினையிலும் தவெகஅரசு தங்கப்பதக்கம் வாங்கியுள்ளது. அதிமுக ஆட்சியில் கொள்முதல் எப்படி செய்யப்பட்டது விலைவாசி எப்படி இருந்தது என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும் நிச்சயம் வருகின்ற காலங்களில் எடப்பாடியாருக்குக்கு களம் சாதகமாக இருக்கும் வெற்றி வாகை சூடுவார் என கூறினார்.



