அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரின் இல்லத் திருமண விழா கடந்த 11-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.
விருத்தாசலம், பொன்னேரி பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள ARS மஹாலில் காலை 11.00 மணியளவில் ‘நீக்காஹ்’ (திருமணம்) நடைபெற்றது.

மணமகன் Er. S. ரியாஸ் அஸ்லம் (B.E.) அவர்களுக்கும், மணமகள் Dr. H. ரைஸா ஃபாத்திமா (B.D.S.) அவர்களுக்கும் சுற்றமும் நட்பும் சூழத் திருமணம் இனிதே நிறைவேறியது.

இதனைத் தொடர்ந்து, மணமக்களின் வலிமா (வரவேற்பு நிகழ்ச்சி) வரும் 14-ஆம் தேதி புதன்கிழமை காலை 11.30 மணியளவில் மதுரை, கருப்பாயூரணி, MP மஹாலில் நடைபெறவுள்ளது. இத்திருமண விழாவில் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கல்வியாளர்கள் பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.




