மதுரை மாவட்டம் மேலூரில், புரட்சித்துறவி அருட்பிரகாச வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு, பாரதிதாசன் அகாடமி மற்றும் ‘இளைஞர்களின் வெற்றிப் பயணம்’ அமைப்பு இணைந்து நடத்திய தென்மாவட்ட அளவிலான மாபெரும் பேச்சுப்போட்டி (11.10.2026) சிறப்பாக நடைபெற்றது.

பாரதிதாசன் அகாடமி செயலாளரும், ‘இளைஞர்களின் வெற்றிப் பயணம்’ நிறுவுநருமான பாவலர் சி. சூர்யா நிகழ்விற்கு வரவேற்புரையாற்றினார்.
இந்தத் திறனாய்வுப் போட்டியில் தென்மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர் மிகுந்த ஆர்வமுடன் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் சிறப்பாகப் பேசிய மாணவர்களுக்குப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன:

முதல் பரிசு: ரூ. 2,000 மற்றும் சான்றிதழ் – மாணவி துர்கா
இரண்டாம் பரிசு: ரூ. 1,500 மற்றும் சான்றிதழ் – மாணவி கோகுலஸ்ரீ
மூன்றாம் பரிசு: ரூ. 1,000 மற்றும் சான்றிதழ் – மாணவர் முகிலன்
சிறப்புப் பரிசுகள்: தலா ரூ. 500 மற்றும் சான்றிதழ்கள் – பெரியசவுளி மற்றும் பூவிகா
மேலும், போட்டியில் கலந்துகொண்ட அனைத்து மாணவ, மாணவியருக்கும் ஊக்கப்படுத்தும் வகையில் புத்தகங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

விழாவில் தமிழ்நாட்டு கல்வி இயக்கம் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் செ. கர்ணன், நாம் தமிழர் கட்சியின் மேலூர் பொறுப்பாளர்கள் மணிக்குமார், வன்னிராஜா, தமிழர் மக்கள் இயக்கம் தங்கம் அடைக்கன், மரபு வேளாண்மை செயற்பாட்டாளர் கிருங்கை திருமாறன் மற்றும் கேசம்பட்டி தேவி ஆகியோர் சிறப்புரையாற்றி வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் பாரதிதாசன் அகாடமி ஆசிரியர்கள் பார்த்திபன், அருணா, நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் சாமிக்கண்ணு மற்றும் ஏராளமான பெற்றோர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிறைவாக, பாரதிதாசன் அகாடமி தாளாளர் சி. ஜீவா நன்றியுரையாற்றினார். போட்டியில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் விழாக்குழுவினர் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.




