• Fri. Nov 14th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது

Byகாயத்ரி

Dec 30, 2021

மகர விளக்கு பூஜையை ஒட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. மண்டல பூஜைக்காக சபரி மலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 15 ஆம் தேதி திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னர், கடந்த 26 ஆம் தேதி மண்டல பூஜை நடந்தது. மண்டல பூஜைக்கு பின் அன்று இரவு கோவில் நடை அடைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார்.


இரவு 10 மணிக்கு நடை சாத்தபட்ட பின்னர் கோவிலை சுத்தம் செய்யும் பணி நடைபெறும். நாளை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். பிரசித்தி பெற்ற மகரவிக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் ஜனவரி 14 ஆம் தேதி நடைபெறுகிறது. நாளை முதல் எருமேலி பெருவழிப்பாதை வழியாகவும் சபரிமலைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

கொரோனா கட்டுப்பாடு காரணமாக கொரோனா 2 டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.