• Sun. Oct 11th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

நவராத்திரி கொலு மண்டபத்தில் விநாயகருக்கு சிறப்பு பூஜை..,

ByKalamegam Viswanathan

Oct 11, 2026

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாடக்குளம் கிராமத்தில் இந்த ஆண்டு நடைபெற உள்ள 124ம் ஆண்டு நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு மந்தை திடலில் உள்ள கொலு மண்டபத்தில் அமைந்துள்ள விநாயகருக்கு சிறப்பு பூஜைகளும் திவாராதனைகளும் நடைபெற்றது

அதனைத் தொடர்ந்து நவராத்திரி கொலு மண்டபத்தின் முன்பு வர்ணம் தீட்டப்பட்ட முகூர்த்த கால் ஊன்றும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது

ராஜராஜேஸ்வரி அலங்காரத்தோடு தொடங்கி ஒவ்வொரு நாளும் கபாலீஸ்வரி அம்மன் விசேஷ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்க கூடிய நிலையிலே திருவீதி உலாவும் நடைபெற உள்ளதால் இன்று தொடங்கி நவராத்திரி திருவிழா முடியும் வரை விழாக்கோலம் காண உள்ள மாடக்குளம் கிராமத்தில் நவராத்திரி திருவிழாவுக்காக பந்தல்கால் நடும் நிகழ்வு இன்று கோலாகலமாக நடைபெற்றது

முன்னதாக கோவிலில் விநாயகருக்கு நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பிறகு பக்தர்களுக்கு விபதி பிரசாதங்கள் வழங்கப்பட்டன.